அதிகாரம் 98 · பெருமை
Greatness
perumai
॥
Kurals 971–980, on greatness.
10 verses·Tamil with translation
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
oḷioruvaṟku uḷḷa veṟukkai iḷioruvaṟku
aḵtiṟantu vāḻtum eṉal.
An aspiration for noble achievement, that is what is called greatness : and littleness is the thought that sayeth, I shall live without it.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
piṟappokkum ellā uyirkkum ciṟappovvā
ceytoḻil vēṟṟumai yāṉ.
The manner of birth is the same for all men: but their reputations vary because they differ in the lives that they lead.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
mēliruntum mēlallār mēlallar kīḻiruntum
kīḻallār kīḻal lavar.
Even if they are noble, those that are not noble are not noble; and even if they are low-born, those that are not low are not low.
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
orumai makaḷirē pōlap perumaiyum
taṉṉaittāṉ koṇṭoḻukiṉ uṇṭu.
Even as chastity in a woman, greatness can be maintained only by being true to one's own self.
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
perumai yuṭaiyavar āṟṟuvār āṟṟiṉ
arumai uṭaiya ceyal.
Those that are great have the puissance to employ adequate means and achieve things that are impossible for others.
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
ciṟiyār uṇarcciyuḷ illai periyāraip
pēṇikkoḷ vēmeṉṉum nōkku.
It is not in the grain of small men to revere the great and earn their good will and favour.
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
iṟappē purinta toḻiṟṟām ciṟappuntāṉ
cīral lavarkaṇ paṭiṉ.
If fortune falleth to the lot of the little-minded their insolence will know no bounds.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
paṇiyumām eṉṟum perumai ciṟumai
aṇiyumām taṉṉai viyantu.
Greatness is ever unpretending and modest: but littleness vaunteth its merits before all the world.
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
perumai perumitam iṉmai ciṟumai
perumitam ūrntu viṭal.
Greatness showeth condescension unto all: but littleness is the very acme of insolence.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
aṟṟam maṟaikkum perumai ciṟumaitāṉ
kuṟṟamē kūṟi viṭum.
Greatness is always for screening the infirmities of others : but littleness will talk nothing but scandal.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).