அதிகாரம் 18 · வெஃகாமை
Non-Conveting
veḵkāmai
॥
Kurals 171–180, on non-conveting.
10 verses·Tamil with translation
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
naṭuviṉṟi naṉporuḷ veḵkiṉ kuṭipoṉṟik
kuṟṟamum āṅkē tarum.
Behold the man who leaveth the right way and coveteth another man's wealth: his wickednesses will increase and his family will decline.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
paṭupayaṉ veḵkip paḻippaṭuva ceyyār
naṭuvaṉmai nāṇu pavar.
Behold the men that turn away from evil : they covet not, neither do they yield to ignoble deeds.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
ciṟṟiṉpam veḵki aṟaṉalla ceyyārē
maṟṟiṉpam vēṇṭu pavar.
Behold the men that care for other joys : they are not greedy after little delights, nor do they yield unto iniquity.
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
ilameṉṟu veḵkutal ceyyār pulamveṉṟa
puṉmaiyil kāṭci yavar.
Behold the men that have mastered their senses and enlarged their vision : they covet not saying, Lo, we are in want.
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
aḵki akaṉṟa aṟiveṉṉām yārmāṭṭum
veḵki veṟiya ceyiṉ.
Of what avail is a mind that is subtle and comprehending, if it yieldeth unto greed and consenteth unto insensate deeds ?
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
aruḷveḵki āṟṟiṉkaṇ niṉṟāṉ poruḷveḵkip
pollāta cūḻak keṭum.
Even he who hungereth after grace and walketh in the path shall perish if he hankereth after wealth and plotetth evil.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
vēṇṭaṟka veḵkiyām ākkam viḷaivayiṉ
māṇṭaṟ karitām payaṉ.
Covet not the wealth that greed gathereth: for its fruit is bitter in the day of enjoyment.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
aḵkāmai celvattiṟku yāteṉiṉ veḵkāmai
vēṇṭum piṟaṉkaip poruḷ.
If thou desire that thy substance should not grow less, covet not the riches in thy neighbour's hands.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
aṟaṉaṟintu veḵkā aṟivuṭaiyārc cērum
tiṟaṉaṟin tāṅkē tiru.
Behold the wise man that understandeth justice and coveteth not: Lakshmi knoweth his worth and seeketh him in his home.
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
iṟalīṉum eṇṇātu veḵkiṉ viṟalīṉum
vēṇṭāmai eṉṉuñ cerukku.
The greed that looketh not beyond engendereth destruction : but the greatness that sayeth, I desire not, triumpheth over all.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).