அதிகாரம் 127 · அவர் வயின் விதும்பல்
The Longing of the Lovers to Meet
avar vayiṉ vitumpal
॥
Kurals 1261–1270, on longing of the lovers to meet.
10 verses·Tamil with translation
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
vāḷaṟṟup puṟkeṉṟa kaṇṇum avarceṉṟa
nāḷoṟṟit tēynta viral.
My eyes have lost their lustre and grown dull, and my fingers have worn away for counting of the days that I have noted on the wall.
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
ilaṅkiḻāy iṉṟu maṟappiṉeṉ tōḷmēl
kalaṅkaḻiyum kārikai nīttu.
What if I forget to-day, my maid ? My beauty hath already left me and my bracelet hath slipped off my arm.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
uraṉnacaii uḷḷam tuṇaiyākac ceṉṟār
varalnacaii iṉṉum uḷēṉ.
He parted from me longing for conquests : and if I live yet, it is for the longing of his return.
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
kūṭiya kāmam pirintār varavuḷḷik
kōṭuko ṭēṟumeṉ neñcu.
He gave my company up and parted without any regard to my feelings but yet for the mere thinking of his speedy return my heart swelleth with joy !
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
kāṇkamaṉ koṇkaṉaik kaṇṇārak kaṇṭapiṉ
nīṅkumeṉ meṉtōḷ pacappu.
Only let my eyes take their fill of the sight of my beloved: pallor will then no more be seen on my wasted arm.
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
varukamaṉ koṇkaṉ orunāḷ parukuvaṉ
paitalnōy ellām keṭa.
Let my spouse but return home: and then in one day I shall drink the nectar of his presence and bid farewell to this wasting disease.
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.
pulappēṉkol pulluvēṉ kollō kalappēṉkol
kaṇaṉṉa kēḷir viraṉ.
When the beloved who is dear even as my eyes cometh home, shall I sulk for his long absence ? or shall I embrace him ? or shall I do both ?
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
viṉaikalantu veṉṟīka vēntaṉ maṉaikalantu
mālai ayarkam viruntu.
May the prince begin the battle at once and triumph! And may I return in the evening and feast at home with my loved one !
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
orunāḷ eḻunāḷpōl cellumcēṇ ceṉṟār
varunāḷvaittu ēṅku pavarkku.
To those who count the days and yearn for the return of the beloved who is away, one single day will creep along with the slowness of seven.
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
peṟiṉeṉṉām peṟṟakkāl eṉṉām uṟiṉeṉṉām
uḷḷam uṭaintukkak kāl.
Of what avail will be my getting back or the meeting or even the hearty embrace, if the heart of my loved one be broken before then ?
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).