இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
irunōkku ivaḷuṇkaṇ uḷḷatu orunōkku nōynōkkoṉ ṟannōy maruntu.
Two are the looks of her eye: one of them tortureth the heart, but the other is the balm that healeth it.
அதிகாரம் 110 · குறிப்பறிதல்
kuṟippaṟital
Kurals 1091–1100, on reading of the heart by signs.
10 versesTamil with translation
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
irunōkku ivaḷuṇkaṇ uḷḷatu orunōkku nōynōkkoṉ ṟannōy maruntu.
Two are the looks of her eye: one of them tortureth the heart, but the other is the balm that healeth it.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது.
kaṇkaḷavu koḷḷum ciṟunōkkam kāmattil cempākam aṉṟu peritu.
The furtive lightning glance that is turned on the lover the moment that his eyes are turned aside, is not merely the half of love: it is more than a moiety.
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.
nōkkiṉāḷ nōkki iṟaiñciṉāḷ aḵtavaḷ yāppiṉuḷ aṭṭiya nīr.
She looked, and then she bowed : that was the watering of the young plant of love that was springing between us.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்.
yāṉnōkkum kālai nilaṉnōkkum nōkkākkāl tāṉnōkki mella nakum.
When I look at her, she looketh at the ground: but when I look away, she looketh on me and solely smileth.
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்
kuṟikkoṇṭu nōkkāmai allāl orukaṇ ciṟakkaṇittāḷ pōla nakum
She doth not seem to see me, it is true : but she smileth to me the while she affecteth but to wink an eye.
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.
uṟāa tavarpōl coliṉum ceṟāarcol ollai uṇarap paṭum.
Though they feign to speak as strangers, the words of the loving will be seen through in an instant.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
ceṟāac ciṟucollum ceṟṟārpōl nōkkum uṟāarpōṉṟu uṟṟār kuṟippu.
The half-hearted reproach and the offended look are the marks of those who pretend to spurn but who really love us in their hearts.
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்.
acaiyiyaṟku uṇṭāṇṭōr ēeryāṉ nōkkap pacaiyiṉaḷ paiya nakum.
The slender-shaped maid melteth to see my imploring look and softly smileth: and the gentle smile giveth her an added grace.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.
ētilār pōlap potunōkku nōkkutal kātalār kaṇṇē uḷa.
It is only in lovers' eyes that one can see the look of absolute unconcern, as if they were perfect strangers.
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.
kaṇṇoṭu kaṇiṇai nōkkokkiṉ vāyccoṟkaḷ eṉṉa payaṉum ila.
When eyes speak their consent to eyes, the words of the mouth are quite superfluous.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).